கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வங்கதேசம் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

வங்கதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில் உற்சாகமாக வரவேற்பு
Updated On :26 மார்ச் 2021, 6:15 am

DIN

வங்கதேசம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டு 10.30 மணியளவில் வங்கதேசத் தலைநகர் டாக்காவிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ராணுவம் சார்பில் சிவப்பு கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து டாக்காவிலுள்ள தியாகிகள் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் வஙதேச தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

15 மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்று பரவலுக்கிடையே பிரதமர் மேற்கொள்ளும் இந்த ஆண்டின் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் இந்த பயணத்தின்போது வங்கதேசத்தின் அரசியல், கரோனா கட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.