45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்டில் ஹோலி கொண்டாட்டங்களுக்குத் தடை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

News image
Updated On :26 மார்ச் 2021, 7:41 am

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது இடங்களில் ஹோலி கொண்டாட அனுமதி இல்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்தவகையில் மார்ச் 28 ஆம் தேதி ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் இன்று அதிகபட்சமாக 278 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது ஜார்க்கண்டில் 1,175 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது இடங்களில் கூடி ஹோலி பண்டிகை கொண்டாடத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக மார்ச் 28 ஆம் தேதி சர்ஹுல் திருவிழாவில் ஊர்வலம் தடை செய்யப்பட்டதுடன் ஹோலி கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கும் பொருட்டு மார்ச் 28 முதல் மார்ச் 30 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, தில்லி, மும்பை, குஜராத், சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் ஹோலி பண்டிகையை பொது இடங்களில் கொண்டாடத் தடை விதித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.