கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஹோலிப் பண்டிகை: வெங்கைய நாயுடு வாழ்த்து

ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கைய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image

ஹோலிப் பண்டிகை: வெங்கைய நாயுடு வாழ்த்து

Updated On :29 மார்ச் 2021, 11:29 am

DIN

புது தில்லி: ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கைய நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “வண்ணங்களின் திருவிழா - ஹோலிப் பண்டிகை புனித தருணத்தில் நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடன் கொண்டாப்படும் இந்த வண்ணமயமான திருவிழா, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை கொண்டாடுகிறது. நாட்டு மக்கள ஒவ்வொருவரும் மற்றவருடன் இணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதையும் ஹோலிப் பண்டிகை குறிக்கிறது. இந்த வசந்த விழாவில், வண்ணங்களின் கலப்பு, நமது கலாசார கலப்பு மற்றும் நாகரீக மதிப்புகளின் பகிர்வை நினைவூட்டுகிறது.

நமது நாட்டில், திருவிழாக்கள் எப்போதும், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுவதாகத்தான் எப்போதும் உள்ளது. ஆனால் தற்போது, கரோனா தொற்று நேரத்தில், கரோனா நெறிமுறைகளை பின்பிற்றி நாட்டு மக்கள் இந்த விழாவை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விழா நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.