ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி குழு உறுப்பினர்கள் மூவர் சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாகணத்தில் இரண்டு தனித்தனியான சம்பவங்களில் போலியோ தடுப்பூசி குழுவின் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.


ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாகணத்தில் இரண்டு தனித்தனியான சம்பவங்களில் போலியோ தடுப்பூசி குழுவின் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
மாகாண தலைநகர் ஜலகுபாத்தின் போலீஸ் மாவட்டத்தில் அணியில் ஒருவர் கொல்லப்பட்டதாக மாகாண காவல்துறை தலைவர் ஜுமகுல் ஹேமத் தெரிவித்தார். மற்ற இரண்டு உயிரிழப்புகள் நகர காவல்துறை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதுவரை எந்த குழுவும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை.
திங்களன்று, ஆப்கானிஸ்தான் நாட்டின் 34 மாகாணங்களில் 32 இல் 9.6 மில்லியன் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் நோக்கில் ஐந்து நாள் போலியோ எதிர்ப்பு பிரசாரத்தைத் தொடங்கியது.
தலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3 மில்லியன் ஆப்கானிய குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பூசி பெற முடியவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...