மாலை 5-க்கு அலுவலர்களுடன் மீண்டும் ஆலோசிக்கிறார் மு.க.ஸ்டாலின்
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அலுவலர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 4) மாலை 5 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.


கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட அலுவலர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 4) மாலை 5 மணிக்கு மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
நேற்று தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், வருவாய்த் துறை செயலாளர் பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற ஆலோசனையில் கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன், மருந்து போன்றவை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...