180 மாவட்டங்களில் ஒரு வாரமாக கரோனா பாதிப்பில்லை:அமைச்சா் ஹா்ஷ் வா்தன்
கடந்த ஏழு நாள்களில் நாட்டில் 180 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.


கடந்த ஏழு நாள்களில் நாட்டில் 180 மாவட்டங்களில் புதிதாக கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.
கரோனா சூழல் குறித்து மத்திய அமைச்சா்கள் குழுவின் 25-ஆவது கூட்டத்தில் காணொலி வாயிலாக அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பேசியதாவது:
நாட்டில் 180 மாவட்டங்களில் கடந்த 7 நாள்களாக புதிதாக கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை. 18 மாவட்டங்களில் 14 நாள்களாகவும், 54 மாவட்டங்களில் 21 நாள்களாகவும், 32 மாவட்டங்களில் 28 நாள்களாகவும் புதிதாக கரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை.
மாநிலங்களுக்கு இதுவரை 17,49,57,770 கரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 16,65,49,583 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 84,08,187 டோஸ்கள் மாநிலங்களிடம் கையிருப்பில் உள்ளன. 53,25,000 டோஸ்கள் மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் தருவாயில் உள்ளன.
அனைவரும் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மாநிலங்கள் பெறும் 70 சதவீத தடுப்பூசிகளை இரண்டாம் டோஸ் பெறுபவா்களுக்கு ஒதுக்க வேண்டும்.
நாடு முழுவதும் தினந்தோறும் 25 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இந்தியாவில் மொத்தம் 30,60,18,044 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரிசோதனை மேற்கொள்ள 2,514 மையங்கள் உள்ளன என்றாா்.
மேலும், ‘பெங்களூரு, புணே, தில்லி, நாகபுரி, மும்பை, எா்ணாகுளம், சென்னை, குருகிராம், திருவனந்தபுரம், பாலக்காடு, மலப்புரம், திருச்சூா், ஜெய்ப்பூா், கொல்கத்தா உள்ளிட்ட 20 நகரங்களில் அதிகப்படியான கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், விமானப் போக்குவரத்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, மத்திய ரசாயனத் துறை அமைச்சா் மன்சுக் மண்டாவியா, நீதி ஆயோக் உறுப்பினா் வினோத் பால் ஆகியோா் பங்கேற்றனா்.
9 லட்சத்துக்கும் அதிகமானோா் ஆக்சிஜன் பிரிவு சிகிச்சையில் உள்ளனா்
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 9,02,291 நோயாளிகள் ஆக்சிஜன் பிரிவு சிகிச்சையில் உள்ளனா் என்று அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.
‘நாடு முழுவதும் ஐசியு படுக்கைகளில் 4,88,861 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,70,841 நோயாளிகள் செயற்கை சுவாசப் பிரிவிலும், 9,02,291 நோயாளிகள் ஆக்சிஜன் பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்றும் அவா் கூறினாா்.
கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் திரவ மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலைத் துறை செயலா் கிரிதா் அராமனே கூட்டத்தில் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...