கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாகாலாந்தில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு

நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் மே 14 முதல் ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
நாகாலாந்தில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு
Updated On :11 மே 2021, 9:13 am

PTI


கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் மே 14 முதல் ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மே 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 21-ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என்று உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் நெய்பா க்ரோனு தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று, முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காரணமாக, கரோனா வைரஸ் பரவல் சங்கிலி உடைபடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், முழு ஊரடங்கையடுத்து புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.