டவ்-தே புயல்: குஜராத், டையு கடலோர பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை
அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து, குஜராத் மற்றும் டையு கடலோர பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அரபிக் கடலில் டவ்-தே புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து, குஜராத் மற்றும் டையு கடலோர பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலைய ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு நோக்கு மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 8. 30 மணி நிலவரப்படி, பன்ஜிம் கோவாவுக்கு தென்மேற்கே 120 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இது குஜராத்தில் போர்பந்தர் - மகுவா இடையே வரும் 18-ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் எனத் தெரிகிறது. புயல் கரையைக் கடக்கும் போது காற்று மணிக்கு 155 கி.மீ வேகம் முதல் 165 கி.மீ வரை வீசக்கூடும் என்றும் மேலும் கடலோர பகுதிகளில் கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குஜராத் மற்றும் டையூ கடலோர பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிரா, கட்ச், டையு, குஜராத்தின் தென் பகுதிகள் சில வற்றில் நாளை கனமழையும், நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் தீவிர கன மழையும் பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...