ஜெர்மன் அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு

ஜி20 நாடுகள் மாநாட்டுக்கு இடையே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கலை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.
ஜெர்மன் அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு
ஜெர்மன் அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு

ஜி20 நாடுகள் மாநாட்டுக்கு இடையே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கலை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று (அக்.31) பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கலைச் சந்தித்து இரு நாட்டிற்கும் இடையேயான நீண்ட நாள் புரிந்துணர்வு , பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்டவறைக் குறித்து உரையாடினார்.

இருதரப்பிலும் நீண்ட இந்த சந்திப்பில் சில செயல் திட்டங்களைக் குறித்தும் விவாதித்தனர். முக்கியமாக பசுமை ஹைட்ரஜன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் ஜெர்மனுடன் நெருக்கமான உறவை இந்தியா கண்டிப்பாக பேணும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார்.

இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறத் துறை தரப்பில் , ‘ இரு நாட்டிற்கும் உண்டான கூட்டறவு , வணிகம் , முதலீடு சார்ந்த கொள்ளைகள் விவாதிக்கபட்டது. மேலும் பசுமை ஹைட்ரஜன் போன்ற சில புதிய திட்டங்களை இந்தியா-ஜெர்மன் இணைந்து செயல்படுத்த ஜெர்மன் அதிபர் உறுதியளித்திருக்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com