நான்கரை ஆண்டுகளில் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள்: உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.


உத்தர பிரதேச மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 4.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட 33 உதவிப் பொறியாளா்களுக்கு பணி ஆணைகளை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘2017-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் 4.5 லட்சம் அரசு மற்றும் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன. மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். எந்தவித சிறிய பரிந்துரைகளும் இல்லாமல் அவா்களின் நியமனங்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியைவிட பல மடங்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிதாக பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ள பொறியாளா்கள் சம்பந்தப்பட்ட துறையின் வளா்ச்சிக்கும், ஊழலை ஒழிக்கவும் பணியாற்ற வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...