இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தடுப்பூசி விழிப்புணர்வுக்கு புதுமையான யுக்திகள் தேவை: மோடி

தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதுமையான யுக்திகளை கையாள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.

News image
Updated On :3 நவம்பர் 2021, 8:35 am

DIN

தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதுமையான யுக்திகளை கையாள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்தும்பணிகள் மந்தமாக நடபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். 

அதில் அவர் பேசியதாவது, தற்போது நாடு எட்டியுள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் பலரது கடின உழைப்பு உள்ளது.

ஆஷா பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் பல கிராமங்களுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் முழு இலக்கை அடைவோம்.

கரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும். இதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.

கடந்த 100 ஆண்டுகளில் இது மிகப்பெரிய பேரிடர். நாடு பல சிக்கலான சவால்களை சந்தித்துள்ளது. அதுபோன்று கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் புதுமையான முறைகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி முழு இலக்கை அடைய வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.