கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாட்டில் புதிதாக 10,197 பேருக்கு தொற்று: 301 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,197 பேருக்கு தொற்று பாதிப்பு உற்தி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளன.

News image
Updated On :18 நவம்பர் 2021, 5:07 am

DIN


புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,197 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளன என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று புதன்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 10,197 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,66,598-ஆக உயா்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 11,376 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,38,73,890பேர் குணமடைந்துள்ளனர். நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,28,555-ஆக உள்ளது. இது 527 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கையாகும். மீட்பு விகிதம் தற்போது 98.28 சதவீதமாக உள்ளது, இது மார்ச் 2020-க்குப் பிறகு அதிகபட்ச சதவிகிதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 301 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,64,153 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது இறப்பு விகிதம் 1.35 சதவிகிதமாக உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 113.68 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | தடுப்பூசி செலுத்தியவா்கள் இந்தியாவுக்கு அச்சமின்றி பயணம் செய்யலாம்
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் செவ்வாய்கிழமை மட்டும் 67,82,042 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 62,70,16,336 பரிசோதனைகளும், செவ்வாய்கிழமை மட்டும் 12,42,177 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.