தில்லியில் மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்று மாசு
தில்லியில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


தில்லியில் இன்று காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால்தில்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்று மாசு ஏற்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிரமம் நிலவி வருகின்றது.
நேற்று காற்றின் தரமானது ‘மோசம்’(290) என்ற பிரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் ‘மிகவும் மோசம்’(350) என்ற பிரிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, காற்றின் தரம் மேம்பட்டு வருவதால் அலுவலகங்கள், பள்ளிகளை நவ. 29 முதல் மீண்டும் திறந்து கொள்ளலாம் என தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...