நாட்டில் புதிதாக 6,990 பேருக்கு தொற்று: 190 பேர் பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 190 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 190 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 6,990 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,45,79,513 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 10,116 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து மொத்தம் 3,40,18,299 ஆக உயர்ந்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.35% என்றளவில் அதிகரித்துள்ளது.
சிகிச்சை பலனளிக்காமல் 190 பேர் பலியான நிலையில், கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,68,980 ஆக உயர்ந்துள்ளது.
தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் மருத்துவமனையில் தற்போது 1,00,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...