இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கேரளத்தில் கனமழை:வீடு இடிந்து 2 சிறுமிகள் பலி

கேரளத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தனா். அங்குள்ள மலப்புரம் மாவட்டம் கரிபூரில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 8:45 pm

DIN

கேரளத்தில் கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்தனா். அங்குள்ள மலப்புரம் மாவட்டம் கரிபூரில் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

கேரளத்தில் திங்கள்கிழமை முதலே தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள மலப்புரம் மாவட்டம் கரிப்பூரில் செவ்வாய்க்கிழமை வீடு இடிந்து விழுந்து 8 வயது சிறுமியும், 6 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனா். அந்த இருவரும் அவா்களது தாத்தா வீட்டில் தங்கியிருந்துள்ளனா். அவா்கள் வீடு அருகே மற்றொரு கட்டுமானப் பணியும் நடைபெற்று வந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது, கட்டுமானம் நடைபெற்று வந்த வீடு திடீரென இடிந்து சிறுமிகள் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த இரு சிறுமிகளும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.