மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் பாக். பயங்கரவாதி கைது; ஆயுதங்கள் பறிமுதல்; ஐஎஸ்ஐ அமைப்புகளுடன் தொடர்பு

தில்லி லட்சுமி நகர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 10:47 pm

DIN

தில்லி லட்சுமி நகர் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
 முகமது அஷ்ரஃப் (எ) அலிக்கு ஐஎஸ்ஐ அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், மேலும், தில்லியில் தாக்குதல் நடத்தும் நோக்கில் அவர் இங்கு தங்கியிருந்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 அஷ்ரஃப், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதும் அங்கிருந்து வங்கதேசம் வழியாக இந்தியா வந்து கடந்த 10 ஆண்டுகளாக தில்லியில் வசிப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்தார்.
 அஷ்ரஃப், பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அவரை தேர்வு செய்து 6 மாதங்கள் பயிற்சி அளித்துள்ளது. தம்மை ஒரு மதப்பிரசாரகர் என்று கூறிக் கொண்டு தில்லியில் தங்கியிருந்த அஷ்ரஃப்பை திங்கள்கிழமை இரவு கைது செய்ததாக துணை ஆணையர் பிரமோத் சிங் தெரிவித்தார்.
 ஐ.எஸ்.ஐ. அமைப்பைச் சேர்ந்த நஸீர் என்பவருடன் அஷ்ரஃபுக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர் மூலம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவது குறித்த தகவல்களைத் தெரிந்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அவர் 6 முறைக்கு மேல் தனது இருப்பிடத்தை மாற்றி வந்துள்ளார். அவர் எந்த இடத்திலும் அதிக நாள்கள் தங்கியிருப்பதில்லை என்பதும் ஆவணங்களைத் தயாரிக்க தில்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
 முகமது அஷ்ரஃப் இந்தியரைப் போலவே தில்லியில் வாழ்ந்து வந்துள்ளார். அவரது இருப்பிடத்திலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, வெடிமருந்துகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதங்கள், வெடி மருந்துகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
 போலீஸ் காவல்: முகமது அஷ்ரஃப்பை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பங்கஜ் சர்மா முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.