இரண்டாம் தவணை தடுப்பூசி: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கும் நிலையில் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு


கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கும் நிலையில் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த ஜனவரி 16-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாம்கள் மூலம் இதுவரை 99 கோடி கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் காணொலிக் காட்சி மூலம் சுகாதாரச் செயலாளர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநர்களிடம் கடந்த திங்கள்கிழமை கலந்துரையாடினார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை நெருங்கியுள்ளது. இப்பணியில் அனைத்துக் குடிமக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு சிரத்தை எடுத்த மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் பாராட்டு தெரிவித்தார்.
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இல்லை. எனவே, மாநில அரசுகளும் யூனியன் பிரதேச அரசுகளும் தங்கள் மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதில் கவனம் செலுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்குத் தேவையான தடுப்பூசிகள் பல மாநிலங்களில் போதிய அளவில் இருப்பில் உள்ளன. மேலும், மத்திய அரசும் மாநில அரசுகளுக்குத் தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்கத் தயாராக உள்ளது. அதனால் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இப்பணியை விரைவுபடுத்த வேண்டும்.
அத்துடன் தடுப்பூசி குறைந்த எண்ணிக்கையில் செலுத்தப்பட்டிருக்கும் மாவட்டங்களை அடையாளம் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுத்தல், உள்ளூர்த் தேவைகளைக் கண்டறிதல், தேவைக்கேற்ப கூடுதல் முகாம்கள் அமைத்தல், ஊரகப் பகுதிகளில் அதிக முகாம்கள் நடத்துதல் போன்ற பணிகளைச் செய்யுமாறு மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச பயணங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த ஓராண்டாக நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதுதொடர்பாகவும் கூட்டத்தின்போது மத்திய உள்துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதோடு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தங்கள் ஆலோசனைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.
அக். 19-ஆம் தேதி நிலவரப்படி செலுத்தப்பட்ட தடுப்பூசி தவணைகள்
99.05 கோடி
முதல் தவணை
74%
இரண்டாம் தவணை
29%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...