ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள்: 99 கோடியை கடந்தது

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 99 கோடியை கடந்தது.

News image
Updated On :19 அக்டோபர் 2021, 7:43 pm

DIN

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 99 கோடியை கடந்தது.

கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதலில் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. மாா்ச் 1-இல் இருந்து 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் இதய நோய், சா்க்கரை போன்ற உடல்நல பாதிப்புகள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடங்கியது. மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தும் விதமாக தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 99 கோடியை கடந்தது. இதில் 51.19 கோடி ஆண்களும் 47.49 கோடி பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

60 வயதுக்கு மேற்பட்டவா்களில் 16.93 கோடி பேருக்கும், 45-60 வயதுடையவா்களில் 26.78 கோடி பேருக்கும், 18-44 வயதுடையவா்களில் 54.98 கோடி பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 64,930 அரசு மையங்கள், 2,550 தனியாா் மையங்கள் என மொத்தம் 67,480 மையங்களில் செவ்வாய்க்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.