‘பெகாஸஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்’: ராகுல்காந்தி

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
‘பெகாஸஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்’: ராகுல்காந்தி
‘பெகாஸஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்’: ராகுல்காந்தி

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பெகாஸஸ் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதுதொடர்பாக சிறப்பு வல்லுநர்குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மேலும், “முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், பாஜக அமைச்சர்கள் என பலருக்கும் எதிராக பெகாஸஸ் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் பெகாஸஸ் மூலம் தரவுகளைப் பெற்றுள்ளார்களா? தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கண்காணிக்கப்பட்டிருந்தால் அவை சட்டப்படி குற்றம்” எனத் தெரிவித்துள்ளார்.

“பெகாஸஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கவனம் செலுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோருவோம். ஆனால் பாஜக இதனை விவாதிக்க விரும்பாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்” எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “யார் இதற்கு பொறுப்பானவர்கள்? யார் இதனைப் பயன்படுத்தியது? நம் மக்களின் தரவுகள் வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டதா? என பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக மூன்று முக்கியக் கேள்விகளை எழுப்பி வருகிறோம். இந்திய ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிதான் பெகாஸஸ். உச்சநீதிமன்ற உத்தரவின்மூலம் நிச்சயம் உண்மை வெளியாகும் என உறுதியாக நான் நம்புகிறேன்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com