போதைப் பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு பிணை வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்.
கடந்த அக்.3-ஆம் தேதி மும்பை-கோவா சென்ற எம்பிரஸ் சொகுசுக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தி விருந்து நடப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக பயணித்து கோகைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையின் போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 13 பேரை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் இன்று ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் வேண்டுகோளை நிராகரித்து கைதான 25 நாட்கள் கழித்து பிணை வழங்கியிருக்கிறது.
மேலும் பிணை விதிகள் குறித்து நாளை(அக்.29) தெரிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரவக்குறிச்சியில் திமுக வெற்றி

திருத்துறைப்பூண்டி தொகுதியில் சிபிஐ வெற்றி

திருவாரூா் தொகுதியில் திமுக வெற்றி

நன்னிலம் தொகுதியில் அதிமுக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


