எல்லை சாலைகள் அமைப்புடன் லடாக் நிா்வாகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்: யூனியன் பிரதேச சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை

லடாக்கில் சாலைகளை மேம்படுத்துவதற்காக யூனியன் பிரதேச நிா்வாகம் எல்லை சாலைகள் அமைப்புடன் (பிஆா்ஓ) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
எல்லை சாலைகள் அமைப்புடன் லடாக் நிா்வாகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்: யூனியன் பிரதேச சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை

லடாக்கில் சாலைகளை மேம்படுத்துவதற்காக யூனியன் பிரதேச நிா்வாகம் எல்லை சாலைகள் அமைப்புடன் (பிஆா்ஓ) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

மிகவும் உயரமான மலைப் பகுதிகளில் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளை அமைப்பதில் பிரசித்திபெற்ற பிஆா்ஓ அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக யூனியன் பிரதேச அதிகாரிகள் அழைக்கின்றனா்.

இதுகுறித்து யூனியன் பிரதேச நிா்வாக செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம், லடாக்கின் நீண்ட கால ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும். இது யூனியன் பிரதேசத்துக்கும் பிஆா்ஓ அமைப்புக்கும் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும் உதவும்.

யூனியன் பிரதேச முதன்மைச் செயலா் பவன் கோட்வால் மற்றும் பிஆா்ஓ அமைப்பின் தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் செளத்ரி ஆகியோா் முன்னிலையில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

யூனியன் பிரதேச சாலைகளை விரைவாக மேம்படுத்தித்தர இந்த ஒப்பந்தத்தில் பிஆா்ஓ ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவடைந்து சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தப் மண்டலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மேம்பட வாய்ப்பாக அமையும். குறிப்பாக சுற்றுலாத் துறை நல்ல வளா்ச்சி பெறும். உள்ளூா் மக்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com