மீண்டும் ஒரு 2020? மளிகைக் கடையிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம்

கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமோ என்ற அச்சத்தில் மளிகைக் கடைகளிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மீண்டும் ஒரு 2020? மளிகைக் கடையிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம்
மீண்டும் ஒரு 2020? மளிகைக் கடையிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம்


மும்பை: கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமோ என்ற அச்சத்தில் மளிகைக் கடைகளிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மகாராஷ்டிர மாநில அமைச்சரவைக் கூட்டம் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற முடிவை அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை எடுப்பார் என்றும் கருதப்படுகிறது.

நாளை பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியாகிவிடுமோ என்ற அச்சத்தில், ஏராளமான மக்கள் அருகிலிருக்கும் மளிகைக் கடைகளுக்குச் சென்று அதிகளவில் பொருள்களை வாங்கி வருகின்றனர். கிராமப் பகுதிகளிலும் கூட இந்தக் காட்சிகளைக் காண முடிகிறது.

மளிகைப் பொருள்கள் என்றால் ஏதோ ஒருவாரம் இரண்டு வாரத்துக்கு அல்ல, சுமார் மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் குவிக்கிறார்கள். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டுப்படுத்த முடியாமல் வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.

மளிகைப் பொருள்களை வாங்க பெரிய பெரிய வாகனங்களில் வரும் பொதுமக்களால் சாலைகளில் கடும் நெரிசல் காணப்படுகிறது.

அதே வேளையில், வெளிமாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களும் அதிகமான அளவில் ரயில் நிலையங்களில் குவிகிறார்கள். பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுவிட்டால் கடந்த ஆண்டைப்போல நடந்தே ஊர் திரும்ப வேண்டுமே என்ற அச்சத்தில் முன்கூட்டியே ஊருக்குத் திரும்பும் யோசனையில் அவர்கள் இருக்கிறார்கள்.

கரோனா: நாட்டில் இன்றைய நிலவரம் அறிய

நாட்டில் இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 879 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1.61 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கரோனா பாதித்த 879 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,71,058 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 34 நாள்களாக தொடர்ந்து கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 12.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாகும்.

கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மிகக் குறைந்த அளவாக 1.35 லட்சம் பேரும், மிக அதிக அளவாக 2020 செப்டம்பர் 18-ல் 10.17 லட்சமுமாக இருந்தது.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1,22,53,697 ஆக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com