இந்தியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு சற்று குறைந்தது

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3,23,144 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,52,991 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது
இந்தியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு குறைந்தது
இந்தியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு குறைந்தது

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 3,23,144 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,52,991 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு குறைந்துள்ளது.

தொடர்ந்து 6-ஆவது நாளாக 3 லட்சத்துக்கு மேல் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 22-ஆம் தேதிக்குப் பிறகு இன்றுதான் மிகக் குறைவான தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 

தமிழகத்திலும் கரோனா தொற்று கடந்த 2 நாள்களாக சற்றுக் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறைச் செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.. அது பற்றி பார்க்க..

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒரேநாளில் 3,23,144 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், ஒரே நாளில் 2,771 போ் உயிரிழந்துள்ளனா். 

இந்த உயிரிழப்புகளையும் சோ்த்து கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,97,894 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 ஆக உயா்ந்துள்ளது. தற்போது கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,82,204 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 2,51,827 குணமடைந்தனர். 

இதுவரை குணடைந்தோரின் எண்ணிக்கை 1,45,56,209 ஆக அதிகரித்துள்ளது.  

நாடுமுழுவதும் இதுவரை 14,52,71,186 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com