தலிபான்கள் கொன்றாலும் ஆப்கனை விட்டு வெளியேற மாட்டேன்: ஹிந்து கோயில் பூசாரி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹிந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.   
தலிபான்கள் கொன்றாலும் ஆப்கனை விட்டு வெளியேற மாட்டேன்: ஹிந்து கோயில் பூசாரி
தலிபான்கள் கொன்றாலும் ஆப்கனை விட்டு வெளியேற மாட்டேன்: ஹிந்து கோயில் பூசாரி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹிந்து கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற மறுத்துள்ளார்.   

தலிபான்கள் சுட்டுக் கொன்றாலும் கோயிலில் சேவையாற்றுவதை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கப் படைகளுடன் போரிட்டு ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

இதனால் ஏராளமான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பல்வேறு நாடுகளும் ஆப்கானிஸ்தானில் உள்ள குடிமக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில் தலைநகரான காபூலில் உள்ள ரத்தன் நாத் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வரும் ராஜேஷ் குமார் என்பவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்தியா செல்ல போதிய ஏற்பாடுகள் செய்து கொடுத்தாலும், முன்னோர்கள் சேவையாற்றிய கோயிலை விட்டு வெளியேறமாட்டேன் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். 

சில ஹிந்து மதத்தினர் ஆப்கனை விட்டு வெளியேற அழைத்தபோது அவர் இது தொடர்பாக பேசியதாவது, ''பலர் ஆப்கனை விட்டு வெளியேறுவதற்கான பயணம் மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறுகின்றனர்.

ஆனால் எனது முன்னோர்கள் ரத்தன் நாத் கோயிலில் நூறு  ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியுள்ளனர். நான் அதை விட்டுச்செல்ல முடியாது. தலிபான்கள் கொன்றாலும் எனது சேவையிலிருந்து பின்வாங்க மாட்டேன்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com