மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: 2 ஆண்டில் 8.30 லட்சம் பேருக்கு சிகிச்சை

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 8.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக புதன்கிழமை மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ், நாட்டில் 50 கோடி பேருக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயனடைந்தோர் விவரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் கூறியது:

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் சுமார் 8.30 லட்சம் பேர் கடந்த 2 ஆண்டுகளில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கையானது, தேசிய சுகாதார ஆணையம் மற்றும் மாநில அரசுகள் வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com