/

நாடாளுமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதியின் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :7 டிசம்பர் 2021, 6:55 am

DIN

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதியின் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, தெலங்கானாவிலிருந்து பயிர் கொள்முதல் செய்யாததை கண்டித்தும், மாநிலம் சார்ந்த பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் எஞ்சியுள்ள நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.