ஒமைக்ரான்: நாட்டின் மொத்த பாதிப்பு 145 ஆக உயர்வு

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் என்ஆர்ஐ ஒருவர் உள்பட இருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இருவரும் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர். என்ஆர்ஐ டிசம்பர் 15-ம் தேதி பிரிட்டனிலிருந்து ஆமதாபாத் விமானம் வந்துள்ளார். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் அவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டவுடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது உடல்நலம் தேறி வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அவருடன் பயணித்தவர்கள் மற்றும் தொடர்பிலிருந்தவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட மற்றொரு 15 வயது சிறுவனும் பிரிட்டனிலிருந்து திரும்பியுள்ளார். இவர் காந்தி நகரைச் சேர்ந்தவர். 

இதன்மூலம், ஒமைக்ரான் வகை தொற்றால் நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com