இந்தியாவில் 236 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா தொற்றால் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட(காலை 10 மணி) அறிவிப்பில்,

ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 65, தில்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலங்கானா 24, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 21, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு - காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம் 2, சண்டிகர், தமிழகம், லடாக், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com