தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவே: சௌமியா சுவாமிநாதன்

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் குறைந்த பாதிப்பே ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்

ஜெனீவா: கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் குறைந்த பாதிப்பே ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அண்மைக்காலமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி  13,154  பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3.48-ஆக உயா்ந்துள்ளது. உயிரிழந்தோா் எண்ணிக்கை 4 80,860-ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே, ஒமைக்ரான் வகை கரோனா தொற்று 961-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

அதிகபட்சமாக தில்லியில் 263 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 252 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி கண்டறியப்பட்டுள்ளது.ஒமைக்ரான் பரவியுள்ள மாநிலங்கள் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது.

குறைந்தபட்சமாக மணிப்பூர், லடாக், ஹிமாச்சல், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனிடையே ‘முந்தைய கரோனா தொற்று பாதிப்பைக் காட்டிலும் குறைந்த நோய் பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்துவதாக ஆரம்பகட்டத்தில் கணிக்கப்பட்ட நிலையில், உயா் நோய் எதிா்பாற்றலிலும் தப்பித்து பாதிப்பை ஏற்படுத்தும் திறனை ஒமைக்ரான் பெற்றிருப்பதற்கான தெளிவான பரிசோதனை மற்றும் மருத்துவ தரவுகள் தற்போது கிடைத்துள்ளன’ என்று இந்திய கரோனா மரபியல் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தனது ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 

ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வந்தாலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு குறைந்த பாதிப்பே ஏற்படுத்துகிறது. 

மேலும் கரோனா தடுப்பூசியால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரான் மட்டுமின்றி பிற நோய்களையும் எதிர்க்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். 

மேலும் எதிர்பார்த்தபடி, "ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக டி செல் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. இது கடுமையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். தடுப்பூசி போடாதவர்கள், தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள்" என சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com