ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி கடைசியாக பதிவிட்ட விடியோ வைரலாகி வருகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திகி, ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்களை புகைப்படம் எடுக்கச் சென்ற இந்திய புகைப்படக் கலைஞர்களின் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இதையும் படிக்கலாமே: மனசாட்சியை உலுக்கிய புகைப்படக்காரர் டேனிஷ் சித்திகி
ஆப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தலிபான்களின் தாக்குதலில் நேற்று இரவு பலியானார்.
இந்நிலையில் அவர் கடைசியாக டிவிட்டரில் பதிவிட்டிருந்த காணொலி தற்போது வைராலாகி வருகின்றது.
சித்திகி கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூலை 13) டிவிட்டரில் ஒரு காணொலியை பதிவிட்டு,
சிறப்பு பாதுகாப்புப் படையினருடன் சென்று கொண்டிருந்த போது, தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளானோம். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். மேலும், ராக்கெட் குண்டு மூலம் தாக்கப்பட்டதை படம் பிடித்துள்ளேன் என விடியோவையும் பதிவிட்டிருந்தார்.
The Humvee in which I was travelling with other special forces was also targeted by at least 3 RPG rounds and other weapons. I was lucky to be safe and capture the visual of one of the rockets hitting the armour plate overhead. pic.twitter.com/wipJmmtupp
â Danish Siddiqui (@dansiddiqui) July 13, 2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காங்கிரஸ் நிா்வாகி கடத்தல் வழக்கில் முக்கிய நபா் கைது

பரங்கிப்பேட்டை ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது: தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காமராஜா் 124வது பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது







