தில்லியில் கடந்த 2 நாள்களில் 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை: சுகாதாரத் துறை

தில்லியில் கடந்த 2 நாள்களில் 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
சத்யேந்தர் ஜெயின் (கோப்புப்படம்)
சத்யேந்தர் ஜெயின் (கோப்புப்படம்)

தில்லியில் கடந்த 2 நாள்களில் 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தில்லியில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 23-ம் தேதி 200-க்கும் மேற்பட்டோருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 600க்கும் அதிகமானோர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், தில்லியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தில்லிக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com