தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சுற்றுலா வந்தவர்களை அம்பானி இல்லத்தில் இறக்கிவிட்ட கார் ஓட்டுநர்: காரணம்?

மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த மூவரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பையில் உள்ள அம்பானி இல்லத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். 

News image
முகேஷ் அம்பானியின் இல்லம்
Updated On :10 நவம்பர் 2021, 11:11 am

DIN


மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு வந்த மூவரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். 

இது குறித்து சந்தேகத்தின்பேரில் வாடகைக் கார் ஓட்டுநரைக் கண்டறிந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலத்திற்கு சுற்றுலா வந்த மூவரை வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மும்பையில் உள்ள அம்பானியின் அன்டிலியா இல்லம் அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். 

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மும்பை காவல் துறையினர் வாடகை கார் ஓட்டுநரைக் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில், தனது காரில் கூகுள் வரைபடம் பணிசெய்யாததால், வேறொரு கார் ஓட்டுநரிடம் வழிகேட்டு வந்ததாகவும், தவறுதலாக அம்பானி இல்லத்திற்கு வந்ததாகவும் கூறினார். இதனால் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் இந்த இடம் குறித்து விசாரித்ததாகவும் கூறினார்.

காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு, ஓட்டுநரை விடுவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.