கரோனாவால் பலியான ரயில்வே ஊழியர்கள் குடும்பத்தினருக்கு வேலை: இந்திய ரயில்வே

கரோனாவால் பணியில் இருக்கும் போது பலியான 2,800 ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு பணி வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை கரோனாவால் அதிகாரிகள் , கடைநிலை ஊழியர்கள் என 3,256 ரயில்வே பணியாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

பணியில் இருக்கும் போதே  பலியானதால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்க ரயில்வே துறை முடிவு செய்திருக்கிறது.

அதன்படி முதலில் 2800 க்கும் மேற்பட்டவர்களுக்கு பணியை வழங்குவதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில் குழந்தைகளாக இருப்பவர்கள் 18-வயதைக் கடந்ததும் அவர்களுக்கும் பணி நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த 4 மாதத்திற்குள் அனைவருக்கும் ‘டி’ பிரிவில் கடைநிலை பணி தரப்படும் என இந்திய ரயில்வே உறுதி அளித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com