பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள்: கேரள முதல்வர்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
பினராயி விஜயன்  (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

புதிய நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் சேவியர் சிட்டிலப்பிள்ளி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "மாநிலத்தில் புதிதாக நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டம் எதுவும் தற்போது அரசுக்கு இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும், "எனினும் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களைத் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

மாநில மகளிர் ஆணைய தரவுகளின்படி, 2010ஆம் ஆண்டிலிருந்து 1100க்கும் மேற்பட்ட வரதட்சணை தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 50 சதவிகித வழக்குகள் திருவனந்தபுரம் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தரவுகளின்படி,  கேரள மாநிலத்தில் 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பாக 32 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com