இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தில்லியில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஒருவர் பலி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :7 செப்டம்பர் 2021, 12:13 pm

DIN


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 50 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,041 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 69,932 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.07 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

ஒருவர் மட்டும் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளார். செப்டம்பர் மாதம் பதிவாகும் முதல் கரோனா பலி இது.

மேலும் 30 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,12,572 பேர் குணமடைந்துள்ளனர். 25,083 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 386 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தில்லி தடுப்பூசி நிலவரம்:

கடந்த 24 மணி நேர நிலவரம்:

  • முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 1,06,558
  • இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 56,209 
  • மொத்தம்: 1,62,767

மொத்த தடுப்பூசி நிலவரம்:

  • முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 1,01,34,046
  • இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்: 41,17,055
  • மொத்தம்: 1,42,51,101

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.