நீட் தோ்வு தொடங்கியது; தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 
நீட் தோ்வு தொடங்கியது; தமிழகத்தில் 1.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ நுழைவுத் தோ்வான நீட் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு (நீட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தோ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. மாலை 5 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். கரோனா பரவலால் மாணவா்களின் நலன் கருதி நீட் தோ்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-இல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ், பஞ்சாபி, மலையாளம் மொழிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டு 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். 

தமிழகத்தில் இருந்து நீட் தோ்வை எழுத, 1,10,971 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், 40,376 மாணவா்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனா். மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார். தமிழகத்தில் 18 நகரங்களில் 224 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 

இன்று பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்கி, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டன. கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் தேர்வு நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com