தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜிநாமா

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் அளித்துள்ளார்.

News image
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜிநாமா
Updated On :18 செப்டம்பர் 2021, 11:33 am

DIN

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் அளித்துள்ளார்.

மேலும், தனது தலைமையிலான அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்தார் அமரீந்தர் சிங்.

பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்துக்கு இன்று மாலை நவ்ஜோத் சிங் சித்து அழைப்பு விடுத்திருந்த நிலையில், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்துக்கு புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க  அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல் மற்றும் பிரியங்கா  ஆதரவளித்தனர். நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சித் தலைவரானது முதலே,  அவருக்கும், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்த நிலையில், சண்டிகரில் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் தனது ராஜிநாமா கடிதத்தை அமரீந்தர் சிங் இன்று அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.