/

மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி: உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு

கரோனா தடுப்பூசிகள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனும் மத்திய அரசின் அறிவிப்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் செளமியா சுவாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

News image
மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி: மருத்துவர் செளமியா சுவாமிநாதன் வரவேற்பு
Updated On :28 ஜனவரி 2024, 4:12 am

DIN

கரோனா தடுப்பூசிகள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனும் மத்திய அரசின் அறிவிப்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் செளமியா சுவாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி பயன்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பால் முன்னெடுக்கப்படும் கோவேக்ஸ் திட்டத்துக்கு உதவுவதில் இந்தியாவின் கடமையைப் பூா்த்தி செய்யும் விதமாகவும், மைத்ரி தடுப்பூசி திட்டத்தின் கீழும் நடப்பாண்டின் 4-ஆவது காலாண்டில் மத்திய அரசிடம் உபரியாக உள்ள கரோனா தடுப்பூசிகள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் செளமியா சுவாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், ” தடுப்பூசி ஏற்றுமதி அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது. உலகளாவிய தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடைய இது உதவும்" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.