
இமாச்சலில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை தொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக 10 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக 123 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இதுவரை ரூ,1108 கோடி மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘ஏமன் நாட்டில் 1.6 கோடி பேர் பட்டினியில் உள்ளனர்’: ஐநா கவலை
இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 130 நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 432 பேர் பலியாகியுள்ளனர். 12 பேர் காணாமல் போயுள்ளனர். பலத்த மழையால் 857 வீடுகளும், 700 மாட்டுக் கொட்டகைகளும் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை கணக்கிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.