திரிணமூல் காங்கிரஸ் கட்சி நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லூயிசினோ ஃபெலேரோ தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவா மாநில முன்னாள் முதல்வருமான லூயிசினோ ஃபெலேரோ புதன்கிழமை திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அம்மாநிலத்தில் அரசியல் அரங்கு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,612 பேருக்கு கரோனா
இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி புதிய முகங்களை வேட்பாளர்களாக களமிறக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 40 தொகுதிகளிலும் திரிணமூல் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் கட்சி கோவாவில் தனிப்பெரும் கட்சியாக வரமுடியாது எனவும் தெரிவித்தார்.
கோவாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் கட்சிகளும் தற்போது போட்டியில் இணைந்துள்ளது அரசியல் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிமுக உலக யோகாசனம் சாம்பியன்ஷிப்..! ஒலிம்பிக்கில் சேர்க்கவும் திட்டம்!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



