அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பெட்ரோல், டீசல் விலை: 12 நாள்களில் லிட்டருக்கு ரூ.7.20 அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு ரூ.7.20 உயா்த்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:52 am

DIN

பெட்ரோல், டீசல் விலை கடந்த 12 நாள்களில் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு ரூ.7.20 உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது:

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசு சனிக்கிழமையும் அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, தில்லயில் ஒரு லிட்டா் பெட்ரோலின் விலை ரூ.101.81-லிருந்து ரூ.102.61-ஆகவும், டீசல் விலை லிட்டா் ரூ.93.07-லிருந்து 93.87-ஆகவும் அதிகரித்துள்ளன.

சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.108.21-ஆகவும், டீசல் ரூ.98.21-ஆகவும் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12 நாள்களில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ச்சியாக அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு ரூ.7.20 விலை அதிகரித்துள்ளது.

நான்கரை மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாா்ச் 22-இல் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த நிலையில், கடந்த 12 நாள்களில் 10-ஆவது முறையாக சனிக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.