தில்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்தார்.
உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக புஷ்கா் சிங் தாமி தொடா்ந்து 2-ஆவது முறையாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் 8 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா்.
பதவியேற்பு விழாவில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா, அஸ்ஸாம் ஆகிய பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் பங்கேற்றனா்.
முதல்வராகப் பதவியேற்றபின்னர் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தில்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசி மாநிலத்திற்கான கோரிக்கைகள் குறித்து பேசியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சந்தித்தார். தில்லி நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமரிடமும் மாநிலத்திற்கு தேவையான நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை தாமி முன்வைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

Whistle Podu Please! CSK அணியின் ரசிகர் பேருந்து அறிமுகம்!

இந்த வங்கி ஏடிஎம் கார்டில் பணமெடுக்க புதிய கட்டுப்பாடு!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

