தொற்றுநோய்க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்வு: அமைச்சர்

மிசோரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மாநில அமைச்சர் தெரிவித்தார். 
தொற்றுநோய்க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்வு: அமைச்சர்

கரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கத் தொடங்கியதால் மிசோரம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மாநில அமைச்சர் தெரிவித்தார். 

மிசோரத்தில் செவ்வாய்க்கிழமை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் லால்சந்தமா ரால்டே கூறுகையில், 

கல்வி முறையை மேம்படுத்தவும், அதிகளவிலான ஆசிரியர்களை நியமிக்கவும் மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பத் தூண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

மணிப்பூரின் வடகிழக்கு எல்லையில் உள்ள சகவார்தாய் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றி ரால்டே, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான உயர்ந்துள்ளது என்றார். 

சில பள்ளிகளில் சேர்க்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால், புதிய வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும் அல்லது வகுப்பறைகளின் திறனை அதிகரிக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com