குஜராத் அம்பாஜி தீர்த்த ஒலி,ஒளிக் காட்சி: பக்தர்களுக்குப் பிரதமர் வேண்டுகோள்
குஜராத் அம்பாஜி தீர்த்தத்தில் ஒலி,ஒளிக் காட்சியில் பங்கேற்குமாறு பக்தர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புது தில்லி: குஜராத் அம்பாஜி தீர்த்தத்தில் ஒலி,ஒளிக் காட்சியில் பங்கேற்குமாறு பக்தர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
51 சக்தி பீடங்களில் பரிக்கிரமா திருவிழா இன்று 7 மணி முதல் தொடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒலி,ஒளிக் காட்சியில் நமது புராணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; குஜராத் மாநிலம் அம்பாஜி தீர்த்தத்தில் பக்தர்களுக்கு மிகவும் மங்களகரமான தருணம் வந்துள்ளது. இன்று மாலை 7 மணி முதல், 51 சக்திபீடங்களின் பரிக்கிரமா திருவிழா இங்கு தொடங்குகிறது. இதில் நமது புராணங்களின் கண்கவர் விளக்கத்துடன் கூடிய ஒளி, ஒலி காட்சியும் அடங்கும். இந்த மாபெரும் நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...