/

மனதின் குரல்: மக்களிடம் கருத்துக் கேட்கிறாா் பிரதமா் மோடி

பிரதமர் மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஏப்ரல் 2022, 10:06 am

DIN

பிரதமர் மோடி, இம்மாதம் ஒலிபரப்பாக உள்ள தமது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வரவேற்றுள்ளார்.

88-வது மனதின் குரல் நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி ஒலிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மக்களிடமிருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “மனதின் குரல் மூலம் நாம் அடிமட்ட அளவில் மாற்றம் ஏற்படுத்துபவர்களின் அசாதாரணமான சாதனைகளை கொண்டாடி வருகிறோம். இத்தகைய உந்து சக்தியாக திகழும் வாழ்க்கைப் பயணங்களை நீங்கள் அறிவீர்களா? அவற்றை 24-ந் தேதி ஒலிபரப்பாகும் இம்மாத நிகழ்ச்சிக்காக பகிருங்கள். 

MyGov தளத்திலோ,  NaMo செயலியிலோ அல்லது  1800-11-7800 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ பகிர்ந்து கொள்ளுங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.