முகக்கவசம் கட்டாயம்: கரோனா அதிகரிப்பால் உ.பி. அரசு உத்தரவு
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் கரோனா அதிகரிக்க தொடங்கியதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் கரோனா அதிகரிக்க தொடங்கியதால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மாநில அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் உத்தரப் பிரதேசமும் ஒன்று. மூன்றாம் அலைக்கு பிறகு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க | முகக்கவசத்தை கட்டாயமாக்குங்கள்: மருத்துவர்கள் வலியுறுத்தல்
இந்நிலையில், கடந்த சில நாள்களாக உ.பி.யில் உள்ள கெளதம் புத்த நகர், லக்னெள, காசியாபாத், மீரட், பாக்பத், புலந்த்ஷாஹர், ஹபுர் மாவட்டங்களில் கரோனா தொற்று உறுதியாகும் விகிதம் அதிகரித்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, 7 மாவட்டங்களிலும் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...