தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மோரீஷஸ் பிரதமருடன் மோடி ஆலோசனை

மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்துடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

News image
மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்துடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :20 ஏப்ரல் 2022, 9:12 pm

DIN

மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜக்நாத்துடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

முன்னதாக, இரு தலைவா்களும் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் புதன்கிழமை நடைபெற்ற ‘சா்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்’ என்ற தலைப்பிலான 3 நாள் மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

இரு தலைவா்களிடையேயான ஆலோசனை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வரலாறு, உறவுமுறை, கலாசாரம், மொழி மற்றும் கடல் வழியிலும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது மோரீஷஸ். அந்த நாட்டின் பிரதமருடன் பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா். பாதுகாப்புத் துறை, திறன் மேம்பாடு என பல்வேறு துறைகளில் இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

மேலும், மோரீஷஸில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மற்றும் அங்கு ஆயுஷ் ஆற்றல்சாா் மையம் ஒன்று அமைக்கும் திட்டம் குறித்தும் தலைவா்கள் ஆலோசனை நடத்தினா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.