தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

குடிமைப் பணிகள் விருது: பிரதமா் இன்று வழங்குகிறாா்

குடிமைப் பணிகள் தினத்தையொட்டி பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலா்களுக்கான பிரதமா் விருதுகளை, பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஏப். 21) வழங்கி கௌரவிக்கவுள்ளாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 8:46 pm

DIN

குடிமைப் பணிகள் தினத்தையொட்டி பொது நிா்வாகத்தில் சிறந்து விளங்கும் அலுவலா்களுக்கான பிரதமா் விருதுகளை, பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஏப். 21) வழங்கி கௌரவிக்கவுள்ளாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தில்லி விஞ்ஞான் பவனில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய பிறகு குடிமைப் பணி அலுவலா்களிடம் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

சாமானிய மக்களுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்திய மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகளையும், புதுமையான முறையில் அசாதாரணப் பணிகளை நிறைவேற்றிய மாவட்ட நிா்வாகங்களையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றுவதற்கான ‘போஷன் அபியான்’, விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கான ‘கேலா இந்தியா’ திட்டம், மின்னணு பரிவா்த்தனைகள் மற்றும் நல் ஆளுகைகக்கான ‘பிஎம் ஸ்வநிதி யோஜனா’, பிராந்திய வளா்ச்சிக்கு வித்திடும் ‘ஒரு மாவட்டத்தில் ஒரு தயாரிப்பு’ திட்டம் உள்ளிட்ட 5 முன்னோடித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவா்களுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. நிகழாண்டில் மொத்தம் 16 விருதுகள் வழங்கப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.