உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: பிரயாக்ராஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை
உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: பிரயாக்ராஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை

உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: பிரயாக்ராஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கேவ்ராஜ்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கூர்மையான ஆயுதத்தால் கொல்லப்பட்ட நிலையில், 2 வயது குழந்தை படுகாயத்துடன் உயிருக்குப் ப


பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள கேவ்ராஜ்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கூர்மையான ஆயுதத்தால் கொல்லப்பட்ட நிலையில், 2 வயது குழந்தை படுகாயத்துடன் உயிருக்குப் போராடி வருகிறது.

கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், 2 வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள், ராஜ்குமார் யாதவ் (55), மனைவி கௌசம் (5), மகள் மணீஷா (25),  மருமகள் சவீதா (30) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயமடைந்த குழந்தை சவீதாவின் 2 வயது மகள் என்று தெரிய வந்துள்ளது.

ராஜ்குமாரின் மகன் சுனில், சம்பவம் நடந்த போது உறவினர்களின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்துவந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதேப்போன்று, ஏப்ரல் 15ஆம் தேதி ககல்பூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதும், அந்த குடும்பத்தின் தலைவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com