தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குருகிராமில் குப்பைக் கிடங்கில் தீ விபத்து: பெண் பலி, 6 பேர் காயம் 

குருகிராமின், மனேசரின் செக்டார் 6-ல் உள்ள குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து எற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 7:27 am

DIN

குருகிராமின், மனேசரின் செக்டார் 6-ல் உள்ள குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து எற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 

திங்கள்கிழமை இரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு பெண் உயிருடன் எரிந்து தீக்கு இரையாகியுள்ளார். ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 

பலத்த காற்று காரணமாக, குப்பைக் கிடங்கில் உள்ள தீயானது அருகிலுள்ள சேரிகளிலும் மளமளவென பரவியது. 

பலத்த காற்று வீசியதால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் இன்று காலை 10.30 மணி வரையிலும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீயை முழுமையாக அணைக்க இன்னும் மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும், குருகிராம் தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹரியாணா மற்றும் தில்லி முழுவதிலும் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 

குடிசைப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்தால், இங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை. மேலும் ஏற்பட்ட சேதம் குறித்து கண்டறியப்படவில்லை.

தற்போது, ​​தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.